சனி, 25 மார்ச், 2017

போகன் ( கூடுவிட்டு கூடு பாய்ஞ்சான்)

சமீபத்தில் வெளிவந்த போகன் திரைப்படத்தில் போகத்தை மட்டுமே முதன்மையாக வைத்த ஒரு பாடல் இருக்கிறது. தற்போதைய படங்களில் இருக்கும் பாடல்கள் போலல்லாமல் இந்தப்பாடலின் வரிகள் தெளிவாக நம் காதில் விழுகிறது.

உலக விசயங்கள் அனைத்தின் மீதும் தீராத ஆசை கொண்டு அதை அடைய நினைப்பதற்கு பெயர் போகம் என்று கூறுவர். தீராத ஆசை என்றும் பொருள் கொள்ளலாம். காம்ம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் ஒரு நாயகன் (அரவிந்தசாமி) அப்படிப்பட்டவன் தான்.

அந்தக் கதாபாத்திரத்தையும் அவனது மனோநிலையையும் மட்டும் பிரதிபலிப்பதாக இருக்கிறது இந்தப்பாடல். அவனுக்கு காமத்தையும் சுகிப்பதையும் தவிர உலகில் வேறொன்றும் முக்கியமில்லை. அன்பையும், அறிவையும் கூட சாதாரணமாகக் கருதுகிறான்.

போகர் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர். போகன் காமம் சுகிப்பவன். போகரின் கூடுவிட்டு கூடுபாயும் மந்திரத்தை பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடித்து மிக உல்லாசவாழ்க்கை நடத்துபவன் கதைதான் இந்தப்படம். கதைக்கு சரியான பெயர்ப்பொருத்தம். படமும் பார்கக்க் கூடிய படம்தான். காமம் என்பது ஒன்றுமில்லை. காதல்தான் உலகில் எல்லாம் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால் படமும், பாடலும் உங்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.

இதோ அந்தப்பாடல்....

காதல் என்பது நேரச்செலவு, காமம் ஒன்றே உண்மைத் துறவு
நேசம் பாசம் போலி உறவு, எல்லாம் கடந்து மண்ணில் உலவு
யாருடன் கழிந்தது இரவு என ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே அவளின் பெயரைச் சொல்பவன் போகன்.

B O G A N Say Boga Boga Bogan

கூடுவிட்டு கூடு பாய்ஞ்சான், மேனிவிட்டு மேனி மேய்ஞ்சான்,
பின்னே போகன் எந்தன் நெஞ்சின்மேலே சாய்ஞ்சான்
பச்சை திராட்சை தூறல் மேலே, இச்சை மூட்டும் தீயோ கீழே,
என்னை நட்ட நடு மையத்திலே சேர்ந்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி, அது போகன் தின்ற மீதி,
நேரினில் போகனைக் காண, அந்தக் காமனும் கொள்வான் பீதி,
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா.

B O G A N Say Boga Boga Bogan (3 times)
காமம் Loaded Gun, நான் முத்தம் துப்பும் ட்ராகன்.

Listen Up.

அன்பும், அறிவும், பண்பும், கழுதையும், உதவிக்கென்றும் நிற்காது,
காதல் இல்லா ஊருக்குள்ளே தலைவலி மாத்திரை விற்காது.
வாங்கும் பொருளின் விலை பட்டை, திருப்பி பார்ப்பவன் மூடன்.
கண்ணில் காணும் பொருள் எல்லாம், தனதே என்பான் போகன்.

தனி ஒருவனுக்குள்ளே உள்ளே ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்குமா?
இவன் மனவெளி ரகசியம் அதை நாசா பேசாதா?
கிரகங்களைக் கைப்பந்தாட விரும்பிடுவானே. கருங்குளிகுள்ளே சென்று திரும்பிடுவானே.
புதுப்புது புதையலை திறந்திடுவனே. முழுவதும் ருசித்ததும் பறந்திடுவனே.
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா..

B O G A N Say Boga Boga Bogan (3 times)
காமம் Loaded Gun, நான் முத்தம் துப்பும் ட்ராகன்.

Hit Me.

கூடுவிட்டு கூடு பாய்ஞ்சான், மேனிவிட்டு மேனி மேய்ஞ்சான்,
பின்னே போகன் என்மேல் சாய்ஞ்சான்
பச்சை திராட்சை தூறல் மேலே, இச்சை மூட்டும் தீயோ கீழே,
என்னை நட்ட நடு மையத்திலே சேர்ந்தான்

Oh Lovely

மொத்த பூமியின் மோகத்து ஜோதி, அது போகன் தின்ற மீதி, 
நேரினில் போகனைக் காண, அந்தக் காமனும் கொள்வான் பீதி,
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா.

Say It Again.

B O G A N Say Boga Boga Bogan (3 times)
காமம் Loaded Gun, நான் முத்தம் துப்பும் ட்ராகன்.
வாழப்பிறந்தவன் போகன். எல்லாம் ஆளப்பிறந்தவன் போகன்.


2 கருத்துகள்: