சனி, 1 அக்டோபர், 2016

தோனி – சொல்லப்படாத கதை


தோனி – சொல்லப்படாத கதை. இது ஒரு கிரிக்கெட் படமல்ல. கிரிக்கெட் வீர்ரைப் பற்றிய படம். ஒரு விளையாட்டு வீர்ரைப் பற்றிய படம். தன் பையன் பெரிய ஆளா வரணும்னு நினைக்கிற அப்பா, எல்லா வித்த்துலயும் உன் கூடவெ இருப்பேங்கிற அம்மா, பாசமான அக்கானு ஒரு குடும்பத்துல பிறக்கிறார் தோனி.
ஆரம்பத்துல தோனிக்கு கால்பந்துல தான் ஆர்வம். யதேச்சையாதான் கிரிக்கெட்டுக்கு வரார். அப்பவும் கோல் கீப்பராதான் ரொம்ப நாளா இருக்குறார். பேட்ஸ்மேன் ஆகல.

லோக்கல் மேட்ச், மாவட்ட அளவிலான போட்டிகள் அப்புறம் அதுக்கு மேல மேலனு போயிக்கிட்டே இருக்கிறார். அதுக்கு இடையில அவருக்கு நெறைய கஷ்டங்கள். லேட்டா வந்த கால் லட்டர், பணத்தட்டுப்பாடு, அரைமணி நேரம் முன்னாடியே கிளம்பி போன ஃப்ளைட்னு ஏக கஷ்டங்கள்.

இதுக்கு இடையில கிரிக்கெட்ல ஆர்வம் இருக்குற ஒரு ரயில்வே மானேஜர் இவருக்கு ரயில்வேல வேலை வாங்கித் தர்றார். வேலை புடிக்கலைனாலும் அப்பாவோட கஷ்டத்தை நெனைச்சு வேலைக்கு போறார். பகல்ல வேலை, சாயங்காலம் கிரிக்கெட்னு ஓயாத உழைப்பு. அங்க இவரால சரியா நிலைக்க முடியல. வேலையை விட்டுட்றார்.

அப்புறம் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி இந்தியன் டீம்ல செலெக்ட் ஆகிடுறார். அதுக்கப்புறம் இவரோட காதல் கதைகள், டீம்ல இவரு செஞ்ச வேலைகளால டீம் உலகக்கோப்பை வாங்குற கதைகள் வருது.

ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்தப் படத்துல தோனி கிரிக்கெட்ல செய்த காரியங்கள் அதிகம் இல்ல. தோனியோட வாழக்கை வரலாறாதான் படம் இருக்கு.

பார்க்குற பார்வையாளனுக்கு தோனியோட ஆளுமைதான் தெரியும் அந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார்னு தெரியாது. அந்தக் கஷ்டங்கள இந்தப் படத்துல காட்டியிருக்கார் இயக்குனர். தோல்வியில கலங்காம, வெற்றியில அதிகம் சந்தோஷப்படாம ஒரு மன உறுதியுள்ள அதே நேரம் எதையும் ரொம்ப சாதாரணமாக எடுத்துக்குற ஒரு மனிதனா தோனி இருக்குறார்.

தன்னோட காதலி இறந்த நேரம் தவிர எப்பவுமே அவர் அழவே இல்லை. அப்படி ஒரு மன உறுதி.

ஒரு லட்சியத்தோட வாழ்ற மனிதன் இன்னொரு வேலையில அடிமையா இருக்குற வரைக்கும் தன்னோட லட்சியத்துல ஜெயிக்க முடியாது. அந்த மாதிரி நிலைமைதான் தோனிக்கும் உருவாகுது. ரயில்வே வேலைல இருக்குற வரைக்கும் அவரால சரியா விளையாட முடியல.

வேலையை நேசிக்கிற, விளையாட்டை நேசிக்கிற, என்ன கஷ்டம் வந்தாலும் ஏத்துக்குற மனிதனா தோனி படத்துல வர்றார்.

“உன்னை யாரும் திருத்தவும் முடியாது. உன் வேலையை யாரும் கெடுக்கவும் முடியாது” னு தோனிய பார்த்து அவரோட மனேஜர் சொல்றது இவரோட மன உறுதியை சொல்ற மாதிரியே இருக்கு. “நானும் 3 வருஷமா பார்க்குறேன். எல்லாமே பௌன்ஸராதான் வருது. எப்படித்தான் சமாளிக்குறதுனே தெரியல சார்.”னு தோனி மானேஜர்கிட்ட சொல்றது பணியிடத்துல நடக்குற பாலிடிக்ஸ் பத்தி பேசுது.

முதல் பாதியில இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில இல்லனாலும் படம் போரடிக்கல. பாடல்கள் சூப்பர். படத்துல நெறைய இடத்துல தோனி சிக்ஸ் அடிக்கிறார். படம் ரொம்ப நீளமானாலும் சூப்பர்.

சுயமுன்னேற்றதுக்கும் வாழ்க்கைய பற்றி தெரிச்சுக்குறதுக்கும் இளைஞர்கள் பாபரோட வரலாற்றையோ, சே குவேராவோட வரலாற்றையோ படிக்க வேண்டியதில்லை. இந்தப் படம் பார்த்தாலே போதும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக